ஏரி கிளை வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2026-07-05 17:20 GMT
திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியின் பாசன கிளை வாய்க்கால் ஆதமங்கலம், நாவலூர், வையங்குடி, சிறுமுளை உள்ளிட்ட ஒரு சில கிராம பகுதிகளில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிளை வாய்க்கால் பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கிராமமக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தரமாக முடித்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்