புதுப்பேட்டை அருகே ஒறையூர்- பலாப்பட்டு சாலையின் வழியாக செல்லும் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையும் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் குடிநீரில் மாசு கலந்த நீர் கலப்பதால் அதை குடிக்கும் கிராமமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.