மொடக்குறிச்சியை அடுத்த குளூர் செங்கரைப்பாளையம் வழியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் குழாய் பதிக்கப்பட்டு துய்யம்பூந்துறை, கனகபுரம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செங்கரைப்பாளையம் மயானம் அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி மொடக்குறிச்சி செல்லும் சாலையில் தேங்கி வருகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது சேறு தெறித்து சாலையில் செல்பவர்கள் மீது படுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?