ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக குடிநீர் வழங்கும் நிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திறப்பு விழா கண்டதோடு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடைக்கிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.