காங்கயம், அகிலாண்டபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடி வருகிறது. காங்கயத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், இது போன்று பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதனை சரிசெய்யாமல் மரக்குச்சியை வைத்தும், துணிகளை கொண்டும் தண்ணீர் வெளியேறாமல் அடைத்துள்ளனர். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தபட்ட துறையினர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.