ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூர் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. பள்ளம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் சாலையின் நடுவே கல் வைக்கப்பட்டுள்ளது. இதானால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் கல் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பையும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் விரைந்து சரி செய்து தர வேண்டும்.
-சிவகுரு, வெண்ணந்தூர்.