சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்தி நகர் 4-வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் தேவைக்காக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மெய்வேல், ஜாகீர் அம்மாபாளையம்.