நாமகிரிபேட்டை பேரூராட்சியில் 18-வார்டுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பைப்லைன் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்கு செல்ல முதியவர்கள், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட பைப்லைனை சாலையில் பதித்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-கீதாஞ்சலி, நாமகிரிபேட்டை.