சின்ன ஏரி பராமரிக்கப்படுமா?

Update: 2026-01-04 13:22 GMT

கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையம் பின்புறம் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில உள்ள குப்பைகள் இந்த ஏரியில் கொட்டப்படுவதால் ஏரி மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஏரியை சீரமைக்கும் திட்டம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்