ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதனால் கிராமத்தில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-இளங்கோவன், கல்லேரிப்பட்டு.