ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்

Update: 2026-01-04 11:51 GMT

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருந்து வெள்ளாறு வரையில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் கிராமப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. எனவே ஆணைவாரி ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்