அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்

Update: 2026-01-04 11:52 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் அருகே வலையப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, தற்போது முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதுடன், விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வழிகிறது. மேலும், சுகாதார கழிவறை கட்டப்பட்டு 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதேபோல் தெற்கு வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் உடைந்துள்ளது. எனவே அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்