குடிநீர் வீணாகிறது

Update: 2026-01-04 13:19 GMT

பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அப்பன்னசெட்டி தெரு, ஆத்து மேடு மற்றும் பி.கொத்தூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு பர்கூர் நூலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. இந்தநிலையில் பர்கூர் பி.கொத்தூர் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி குழாயை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்