பயன்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2025-10-05 17:29 GMT

மாரண்டஅள்ளி அடுத்த ஜக்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஜக்க சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2019-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

-முனிரத்தினம், ஜக்க சமுத்திரம்.

மேலும் செய்திகள்