கூடலூர் அருகே செவிடிபேட்டையில் இருந்து அத்திப்பாளி செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அத்துடன் சாலையில் குடிநீர் வழிந்தோடுகிறது. இதனால் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே உடைந்த குழாயை விரைவாக சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.