சுகாதாரமற்ற குடிநீர் குழாய்

Update: 2025-09-28 15:45 GMT

சேலம் ஜங்ஷன் உழவர் சந்தை எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த குடிநீர் குழாய் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் உள்ள இடத்தில் கான்கிரீட் தரை அமைத்து சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–மணி, சேலம்.

மேலும் செய்திகள்