குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-09-21 11:58 GMT

 சேலம் சூரமங்கலம் மண்டலம் 21-வது வார்டில் பெரியார் நகர் உள்ளது. இந்த பகுதியில் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு குடிநீர் வரும்போது இந்த பகுதியில் உள்ள சிலர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி பிடித்து கொள்கிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தொிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

-ராஜசேகர், பெரியார் நகர், சேலம்.

மேலும் செய்திகள்