சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் வழியாக கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளிக்கு செல்லும் பிரதான சாலை செல்கிறது. மழை பெய்யும் போது இந்த சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பகுதியில் தற்போது புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. குளம் போல் தேங்கும் மழை நீரால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் மீது தண்ணீர் தெரிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், ராமநாதபுரம் புதூர்.