பள்ளிபாளையம் அருகே ரங்கனூர் 4 ரோடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். கோவில் அருகே உள்ள குட்டையில் எப்போதும் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குட்டையில் சிறுவன் தவறி விழுந்து இறந்தான். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த குட்டையை சுற்றி தடுப்பு வேலியோ, சுற்றுச்சுவரோ கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கவி, வெப்படை.