திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கண்ணபிரான் காலனியில் கடந்த சில நாட் களாக குழாய் உடைந்துகுடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. குழாய் உடைந்த இடத்தில் குடிநீர் தேங்கி நிற்பதால் அருகில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து குழாய் உடைப்பு பெரிதாகி அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாக குழாய் உடைப்பை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
-