ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2025-08-03 17:21 GMT

ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி 10-வது வார்டு தே.கொல்லப்பட்டி அருந்ததியர் தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் தற்போது அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

-புகழ், தே.கொல்லப்பட்டி.

மேலும் செய்திகள்