வீணாகும் குடிநீர்

Update: 2025-08-03 11:33 GMT

திருப்பூர் மாநகர பகுதியில் 4-வது வார்டுக்கு உள்பட்ட விக்னேஷ்வரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் முன்னறிப்பு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் எப்போது வருகிறது என்பது அப்பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. ஒருநாள் காலையில் தண்ணீர் வந்தால் மறுநாள் மாலையில் விடப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வித பயனுமின்றி குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீரை சீராக விட வேண்டும். மேலும் முன்னறிவிப்போடு தண்ணீர் விட்டால் அப்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுரேஷ், திருப்பூர்.

மேலும் செய்திகள்