வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர், ஆலம்பட்டி பகுதியில் இருந்து மேட்டு மிஷின் செல்ல தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையில் இரு புறங்களிலும் போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செல்வி, ஆலம்பட்டி.