குடிநீர் வீணாகிறது

Update: 2025-05-18 16:49 GMT

மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வழியாக வள்ளிபுரம் செல்லும் சாலையில் கதிர்மலை முருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் வழியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் தார்சாலையில் தண்ணீர் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்லும்போது கார், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் வேகமாக சென்றால் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தார்சாலை சேதமடையும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், மோகனூர்.

மேலும் செய்திகள்