கொல்லிமலை அடிவாரத்தில் நிமித்ராயன் மேடு பகுதியில் இருந்து வெண்டாங்கி கிராமத்திற்கு செல்லும் குறுக்குப்பாதையில் பாண்டியாறு வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் பகுதியில் கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் வாய்க்கால்களின் பல இடங்களில் கரைகள் உடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்காமல் இருந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் செல்லும் விவசாயிகள் நலன் கருதி உடைந்த கரைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விஜயகுமார், வெண்டாங்கி.