கோழிப்போர்விளையில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் தாமரைக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் குழாயின் ‘கேட் வால்வூ’-வை தொட்டியில் அமைத்து அதன் மீது சிமெண்டு சிலாப்பு போட்டு மூடியுள்ளனர். தற்போது இந்த சிலாப்பு சேதமடைந்து தொட்டி திறந்த நிலையிலும், கேட் வால்வில் தண்ணீர் கசிந்து தொட்டி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த தொட்டியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிலாப்பை சிரமைக்க வேண்டும்.