நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2025-05-18 10:17 GMT

முகிலன்விளையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் சிமெண்டு தூண்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.நடவடிக்கை எடுக்கப்படுமா?எநடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்