வெண்ணந்தூர்-ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அந்த இடத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே உடைந்த குழாயை விரைவில் சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செல்வம், வெண்ணந்தூர்.