திருமூலநகரில் இருந்து அழகப்பபுரத்துக்கு செங்குளம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் சீராக பாய்ந்து செல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.