வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் தண்ணீர் வினியோகிக்கப்படாமல் காலை 9 மணிக்கு விடப்படுகிறது. இதனால் கூலித்தொழிலாளிகள், அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அதிகாலை வேளையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், வெண்ணந்தூர்.