கோவை சுந்தராபுரம் அருகே மாச்சம்பாளையம் பகுதியில் பொது தண்ணீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் மற்றும் அதை சுற்றி அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் கட்டுமானம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தண்ணீர் வீணாவது தடுக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே தண்ணீர் வீணாவதை தடுக்க அந்த குழாயை மாற்றுவதோடு அதை சுற்றி உள்ள கான்கிரீட் கட்டுமானத்தை சீரமைக்க வேண்டும்.