பந்தலூர் அருகே பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தூரத்துக்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. இல்லையென்றால், விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.