குடிநீர் தேவை

Update: 2025-03-09 16:41 GMT

வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் ஊராட்சிக்குட்பட்ட வடுகம்பாளையம் பகுதிகளில் குடிநீர் குழாய் மூலம் வீடு வீடாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை தான் இந்த பகுதிக்கு தண்ணீர் வருகிறது. சரியான குடிநீர் வினியோகம் இல்லாததால் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சீராக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பேபி, வடுகம்பாளையம்.

மேலும் செய்திகள்