குழாயில் உடைப்பு

Update: 2025-03-02 10:51 GMT

கோவையை அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள அத்திக்கடவு சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சாலையில் பதிக்கப்பட்டு உள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள விளைநிலங்களில் தேங்கி பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே அங்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்