பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டணம் துரைராஜ் தெருவில் சீராக குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலைந்து திரியும் நிலையை காண முடிகிறது. அத்துடன் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையும் உள்ளது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.