காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் அரசம்பட்டி பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் தொட்டியின் உட்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த குடிநீரை பருகி மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்து அந்த பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, கிருஷ்ணகிரி.