வீணாகும் குடிநீர்

Update: 2025-01-19 17:14 GMT

வெண்ணந்தூர் அடுத்த பொன்பரப்பிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆலயமணி நகரில் படைவீட்டு அம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், குடிநீர் திட்டத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க முன்வர வேண்டும்.

-விநாயகம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்