வீணாகும் குடிநீர்

Update: 2024-12-29 17:12 GMT

திருப்பூர் -அவினாசி ரோடு பங்களா நிறுத்தம் பகுதியில் குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் பாய்ந்து வீணாகிறது. பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கும் குடிநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் வீணாவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்