முத்துகாப்பட்டி அருகே வேட்டாம்பாடி ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரி அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் கழிவுநீர் மற்றும் குவாரி மூலம் வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் தண்ணீர்் மாசடைந்து வருகிறது. தற்போது ஏரி முழுவதையும் ஆகாயத்தாமரைகள், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீரை ஏரியில் திறந்துவிடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆகாயத்தாமரைகள், சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரேசன், வேட்டாம்பாடி.