குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-12-29 10:36 GMT

பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் ஆங்காங்கே அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்