பந்தலூர் அருகே மலப்பொட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்கு மேல் மூடி இல்லை. இதனால் காற்றில் பறந்து வரும் குப்பைகள் கிணற்றுக்குள் விழுகின்றன. இதன் காரணமாக கிணற்று நீர் மாசுபடுகிறது. இதை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கிணற்றுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும்.