பாப்பாரப்பட்டி நகரையொட்டி பாப்பாரப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. இவை ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பை ஆக்கிரமித்து வருகின்றன. அண்மையில் இந்த பகுதியில் கோடை மழை பெய்த போதும் பாப்பாரப்பட்டி ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை. எனவே இந்த ஏரிக்கு மழைநீர் சீராக வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த ஏரியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
-முருகேசன், பாப்பாரப்பட்டி.