குமராட்சி ஒன்றியம் மேலவன்னியூர், கீழநெடும்பூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில், மேலவன்னியூர் பாசன வாய்க்காலில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.