சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் பூங்கா ரெயில் நிலையம் மிக முக்கியமான ஒன்றாகும். சென்னை சென்ட்ரல், அரசு ஆஸ்பத்திரி, ஐகோர்ட், பிராட்வே, மெரினா கடற்கரை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும் மக்கள் இந்த ரெயில் நிலையத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தினமும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே குடிப்பதற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை சரியாக பராமரிக்கப்படாமல் குப்பையை கொட்டும் கூடமாக மாறிவருகிறது. இதனால் பயணிகள் தாகத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்களை சரிசெய்வார்களா என ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.