துர்நாற்றம் வீசும் குடிநீர்

Update: 2026-02-08 18:35 GMT

மதுரை வார்டு எண் 55, சுப்புராயர் அக்ரஹாரம் மற்றும் தலைவிரிச்சான் சந்து ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து  துர்நாற்றத்துடன் வருகின்றது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. மேலும் சிலர் குடிநீரை வெளியே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்