பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் ஊராட்சியில் மங்களகாணி குளம் உள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் குளத்தில் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.