கூடலூரில் உள்ள அத்திப்பாளி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் நீண்ட நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். தட்டுப்பாடு காரணமாக குடிநீருக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு அலைந்து திரிய வேண்டி உள்ளது. இது தொடர்பாக நகராட்சியிடம் முறையிட்டால் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது என காரணம் கூறுகின்றனர். எனவே விரைவாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.