குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-11-02 18:39 GMT


 திருப்பூரில் தாராபுரம் சாலையில் கரட்டாங்காடு உள்ளது. இந்த பகுதியில் மாநகராட்சியின் சார்பில் வீடுவீடாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 3-வது வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் குழாயை சரிசெய்யவில்லை. மாநகர பகுதியில் குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதை உடனடியாக அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமரன், கரட்டாங்காடு.

மேலும் செய்திகள்