அண்ணாமலை நகர் பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சாணாகுளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.