குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இ்ல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பெரும் அல்லல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. எனவே அப்பகுதியில் விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கிராம மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.